இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

படம்
  இலங்கையில்   வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முதல் பதிவுக்கு விண்ணப்பிப்பதற்கும், தமது முன்னைய பதிவை நீடிப்பதற்கும் பணியகம் அனுமதி வழங்கியுள்ளது. வேலை தேடும் இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான   www.slbfe.lk  இல் உள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் சேவையை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய வசதி இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், பணியகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்களில் முக்கிய தகவலை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வசதியை பயன்படுத்துவதன் மூலம், இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்படும் நாளில் விமான நிலையப் பணியகப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகளை தாமதமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1989 எனும் பணியகத்தின் 24 மணி நேர சேவையை அழைப்பதன் மூலம் இது பற்றிய கூடுதல் தகவல...

அப்பியாசக் கொப்பிகளினை மிக குறைந்த விலையில் மாணவர்களுக்கு வழங்கும் 48 சதோச நிலையங்கள் PROGRAM OF GIVING EXERCISE BOOKS AT LOW COST FOR STUDENTS 2023

படம்
நாடளாவிய ரீதியில் அப்பியாசக் கொப்பிகளினை மிக குறைந்த விலையில் மாணவர்களுக்கு வழங்கும் 48 சதோச நிலையங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது  பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அப்பியாச கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொச கடைகளில் இருந்து உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாசக் கொப்பிகள் நாடு முழுவதுமுள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சிறுவர் கல்வி தொடர்பாக அறிஞர்களின் கருத்துக்கள்

  சிறுவர் கல்வி தொடர்பாக அறிஞர்களின் கருத்துக்கள் குழந்தைக் கல்விச் சிந்தனைகள் ஜோன் கென்றி பெஸ்டலோசி (1746 - 1826) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் பெஸ்டலோசி தனிச்சிறப்புப் பெற்றவர். ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில்களின் படிப்படியான வளர்ச்சியும் அதனால் நிகழ்ந்த ஏழ்மையும், கல்வி நிராகரிப்புகளும் இவரின் கல்விச் சிந்தனைகளிலே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தின. ரூசோவின் இயற்பண்பு நெறி பெஸ்டலோசியின் மீது கருத்தியல் சார்ந்த நேர்நிலைகளையும் எதிர்நிலைகளையும் பிறப்பித்தது. ஐரோப்பிய சூழலில் அரும்பத் தொடங்கிய மக்களாட்சிச் சிந்தனைகள் அவருடைய கல்விச் சிந்தனைகளில் வலிதாக ஊடுருவி நின்றன. இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார். ஸ்ரான்ஸ் ( Stanz), பேர்டோர்ப் ( Burgdorf), வேர்டன் (Yverdon) முதலாம் ஊர்களில் பரிசோதனைப் பள்ளிக் கூடங்களை நிறுவி தமது கோட்பாடுகளின் நடைமுறை நுட்பங்களையும் கண்டறிந்தார். பெஸ்டலோசி எழுதிய பின்வரும் நூல்கள் அவரது கல்வித் தரிசனத் தின் பரிமாணங்களைப் பலவகைகளில் ...